உள்கட்ட வடிவமைப்பில் கூறப்படும் கட்டுக்கதைகள்.

வெற்றிகரமான உள்கட்ட  வடிவமைப்பு பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது தூசி நிறைந்த மற்றும் மந்தமான இடத்தை வசதியான மற்றும் ஸ்டைலான இடமாக மாற்ற ஒரே சரியான நேரம் எடுக்கலாம். இவை அனைத்தும் அதை எப்படி செய்வது அல்லது மிகவும் சிக்கலான சந்தர்ப்பங்களில், நாம் விரும்புவதை சரியாக அறிந்திருக்கிறோமா என்பதைப் பொறுத்தே அமைகிறது. இதில் வெளிப்படையாக, செல்லச் சிறந்த வழி ஒரு அனுபவமிக்க வடிவமைப்பாளரை நியமித்து, நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்கு விளக்குவது தான். ஆனால் உள்கட்ட வடிவமைப்பில் பல தவறான கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாகப் பரவுவதால் பலர் அதை செய்ய மறுக்கிறார்கள்.

உள்கட்ட வடிவமைப்பில் கூறப்படும் மிகவும் பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் தீர்வுகள்:

ஒரு உள்கட்ட  வடிவமைப்பாளர் செலவுகளை அதிகரிக்க செய்வார்:

ஒரு வடிவமைப்பாளரை அல்லது ஒரு கட்டிடக் கலைஞரைப் பணியமர்த்துவதால் அதிக செலவு ஏற்படும் என்ற தவறான கருத்து பொதுவாக உண்டு. அதனால் அது உண்மை அல்ல. அவர் இல்லாதது தான் தானாகவே செலவுகளை அதிவேகமாக அதிகரிக்கும். ஒரு வடிவமைப்பாளர் உங்கள் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் உங்களின் செலவுகள் குறையும்.  இந்தத் திட்டம் பட்ஜெட்டுக்கு மேல் இயங்காது என்பதை உறுதிப்படுத்துவதே அவர்களின் வேலை, எனவே செலவுகள் ஒதுக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குள் இருக்கும், தோற்றத்திலும் உணர்விலும் சமரசம் செய்யாமல், விவரக்குறிப்புகள் மற்றும் இடைவெளிக்குத் தேவையான அத்தியாவசிய செயல்பாடுகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

ஒரு வடிவமைப்பாளரைப் பணியமர்த்துவது உங்கள் வீட்டு  வடிவமைப்பின் மீதான கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்:

உங்கள் வீடு என்பது  உங்களை சார்ந்தது. உங்கள் ஆளுமை மற்றும் உங்கள் வாழ்க்கை முறை, எனினும் நீங்கள் அதை வரையறுக்கிறீர்கள். இது கட்டிடக் கலைஞர் அல்லது வடிவமைப்பாளரின் சுவை மற்றும் விருப்பங்களைப் பற்றியது அல்ல. ஒரு வடிவமைப்பாளர் என்பவர் அவருடைய விருப்பங்களை உங்கள் வீட்டில் புகுத்தப்போவதில்லை. அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை செய்து தரவே முயற்சி செய்வார்கள். ஒருவேளை அதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து ஆராய்ச்சி செய்து உங்களுக்கு அதன் சாதக பாதகங்களை விளக்கிக் கூறி உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற மாறுபட்ட யுக்திகளை கையாள்வார்கள். எனவே நீங்கள் வடிவமைப்பாளரைப் பணியமர்த்துவதால் உங்கள் வீட்டின் கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள் என்றெல்லாம் நினைத்துப் பயப்பட தேவை இல்லை.

ஒரு வடிவமைப்பாளர் ஒரு சில பகுதிகளை மாற்றுதல், மற்றும் வண்ணப்பூச்சு செய்தல் மூலம்  இடத்தை வடிவமைக்கிறார்:

நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது வடிவமைப்பாளர் சில பகுதிகளை மட்டும் மாற்றியமைத்ததை போலவும், சில இடங்களில் வண்ண பூச்சுகளை பூசியது  போலவும் மட்டுமே தெரியும். அனால் அவர்கள் அதற்காக ஒரு நீண்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு இருப்பார்கள். அதன் பின்னணியில் பல யோசனைகளும், யுக்திகளும் கையாளப்பட்டு இருக்கும். அவர்கள் வண்ணப்பூச்சு செய்வதற்கு தகுந்த வண்ணங்களை தேர்ந்தெடுக்கவே நிறைய நிற உளவியல் கொள்கைகளை கையாள வேண்டி இருக்கும். அதுபோல ஒரு பகுதியை மாற்றியமைக்க வேண்டி இருந்தாலும் அவர் அதுபற்றி ஆழ்ந்து யோசித்து அந்தப் பொருளை அங்கே  மாற்றுவதன் மூலம்  ஏதேனும் பிற்கால சிக்கல்கள் வருமா என்றெல்லாம் தெளிவாகச் சிந்தனை செய்தே வடிவமைப்பை மேற்கொள்வார்கள். இதனை நாம் நன்றாக உற்று நோக்கினால் மட்டுமே நாம் புரிந்து கொள்ள முடியும்.

அவர்களின்  திட்டம் மிகவும் சிறியது:

இது உங்கள் குளியலறையை புதுப்பிக்கிறதா அல்லது உங்கள் முழு வீட்டின் அலங்காரத்தை மாற்றியமைக்கிறதா என்பதை பொறுத்து அமைந்தாலும்  எந்தத் திட்டமும் மிகச் சிறியதல்ல என்பதை உற்று நோக்கினால் நாம் புரிந்து கொள்ளலாம்.  இது எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பது மற்றும் வேலைக்குச் சரியான வடிவமைப்பாளரைக் கண்டுபிடிப்பது பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கி இருக்கும். திட்டம் சிறியதாக பார்க்கத் தெரிந்தாலும் அதிலும் நிறைய நுணுக்கங்கள் கண்டு ஆராயப்பட்டிருக்கும்.தலைசிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வடிவமைப்பாளர்கள் இதற்காக நிறைய சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கும். எனவே மேலோட்டமாகப் பார்த்து சிறிய திட்டம் தான் என்று கூற முடியாது.

ஒரு ஒப்பந்தக்காரரே வடிவமைப்பாளராகச் செயல்பட முடியும்:

ஒரு ஒப்பந்தக்காரர் ஒரு கட்டிடக் கலைஞராகச் செயல்பட முடியும் என்று வாடிக்கையாளர்கள் பலரும் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் செலவு  கட்டணத்தில் சேமிக்க முடியும் எனக் கருதி வடிவமைப்பாளர்களை தனியாக நியமிக்க விரும்புவதில்லை.  ஒரு கட்டிடக் கலைஞர், ஒரு பில்டர், பொறியாளர்கள் மற்றும் உள்கட்ட  வடிவமைப்பாளரின் வேலைக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளப் பெரும்பாலான மக்கள் தவறிவிடுகின்றனர். ஒரு ஒப்பந்தக்காரரை நீங்கள் வடிவமைப்பாளர்களாக நினைத்துப் பணியை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வீடு அல்லது கட்டிடம் அதன் தனித்தன்மையை இழந்துவிடும். ENAVEY ஒரு வடிவமைப்பாளரை நீங்கள் நிச்சயமாக நியமிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் வடிவமைப்பாளரை உங்கள் வீட்டில் ஒருவர் என்று நினைத்துப் பாருங்கள். அவர்கள், உங்களுக்காகச் சிறந்ததை  செய்து தர விரும்புகிறார்கள். மேலும் நீங்கள் விரும்புவதைப் பெறுவதை உறுதிப்படுத்த அவர்கள் கடினமாக முயற்சிப்பார்கள். எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், திட்டத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், உங்கள் கனவு இடத்தை உருவாக்குவதற்கான செயல்களை  செய்யும்போது, ஒரு வடிவமைப்பாளரை நிச்சயம் நியமிக்கவும்.

மேலும் வாசிக்க : சிறந்த வடிவமைப்பாளராக மாறுவது எப்படி?

Leave a Reply

Copyright 2023 Interior Design Academy | All Rights Reserved.