இன்டிரியர் டிசைன் தொழில் நுட்பம் என்பது தற்காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. போட்டி நிறைந்த வணிக உலகில் தங்கள் வாடிக்கையாளரை கவர்ந்து இழுக்க ஒவ்வொரு வணிக நிறுவனமும் ஒவ்வொரு யுக்திகளை கையாள்கிறது. இதில் அனைத்து நிறுவனமும் இன்டிரியர் டிசைன் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. காரணம் ஒரு நிறுவனம் அழகாக காட்சியளித்தால் தான் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திற்குள்ளேயே கால் எடுத்து வைக்கிறார்கள். இன்று திரையரங்கங்கள், கல்யாண மண்டபங்கள், தனியார் அலுவலக கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கிகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எனத் தொடங்கி தொடங்கி வீடுகள் வரை இன்டிரியர் டிசைன் தொழில் நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே வளர்ந்து வரும் இந்த உலகில் இன்று இன்டிரியர் டிசைன் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இங்கு தற்போது இன்டிரியர் டிசைன் தொழில்நுட்பத்தில் புகுத்தப்படும் நவீன யுக்திகள் பற்றியும், இன்டிரியர் டிசைன் எதற்காக செய்யப்படுகிறது அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் உங்களுக்கு தேவையான தகவல்களை நாங்கள் தருகிறோம். மேலும் இந்த இன்டிரியர் டிசைன் துறையின் சுருக்கமான வரலாறு என்ன, இன்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்பத்தில் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும், மாணவர்களுக்கு இந்த துறையில் என்னென்ன கல்விவாய்ப்புகள் உள்ளன, இன்டிரியர் டிசைன் சம்மந்தமான கல்விகளை பயிலும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்ற அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.